ஏன் மறைக்கிறாய்
நீ காதலில் இருக்கிறாய்
நீ மறுக்கிறாய்
ஆனால் என்னை நினைக்கிறாய்
ஏதோ ஒரு வலி மனச
லேசா வந்து வந்து உரச
உன்னை தள்ளி தள்ளி நடக்க
அது மட்டும் என்னால் ஆகல
எப்போ என்ன சொல்லி முடிய
இப்படியே நாளும் விடிய
துண்டு துண்டா உள்ள உடைய
உனக்கென்ன புரிஞ்சுக்க தோனல
கை அசைக்கிறாய்
எப்போதும் போல் சிரிக்கிறாய்
ஓ ஓ ஓர் நொடியிலே
எனக்குள் நான் புதைகிறேன்
எந்த பறவை என்னை தாண்டி
போகும் போதும் உந்தன் சாயல்
நீ இல்லாமல் என்ன செய்ய நான்
நீயும் நானும் சொன்ன வார்த்தை
ஒன்று கூட தொலையவில்லை
காற்றின் வீட்டில் சேமித்தேனே நான்
என் பழைய நாட்கள் எல்லாம்
என்னை கொஞ்சம் கொஞ்சமாய் கொல்கிறதேடி
உன் வருகை உள்ளங்கையின்மேல்
சின்னன் சிறு இறகாய் சேர்கிறதே
நீ எனக்குள்ளே
என்னென்னம்மோ நடத்தினாய்…..
யார் மறப்பது
தள்ளி சென்றும் நெருங்கினாய்
சொல் இன்னும் என்னை
என்ன செய்ய நினைக்கிறாய்
ஓ ஓ நீ சொல்லாவிட்டால்
உன் காதலை தொலைக்கிறாய்