Innum vera song lyrics


Movie: Sangatamizham 
Music : Vivek merwin
Vocals :  Diwakar
Lyrics :  Madhan karky
Year: 2002
Director: vijay chander
 


Tamil Lyrics

வேற எதுமே
தேவை இல்லையே
அழகான ஊரு
அதில் எங்க வீடு
அன்புக்கு ஈடு ஏதும் இல்ல

கடல் காய்ந்து போகும்
மலை சாய்ந்து போகும்
நிஜமான நேசம் தேய்வதில்ல

இன்னும் வேற என்ன வேணுமே
வாழும் இந்த வாழ்க்க போதுமே
இன்னும் வேற என்ன வேணுமே
இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ
வாழும் இந்த வாழ்க்க போதுமே

தினம் தோறுமே இங்கு திருவிழா
தித்திக்குதே தேன் துளிகளாய்
தோள் சாய்ந்திட பல உறவுகள்
மயில் தோகையாய் பல கனவுகள்

இந்த உலகே வந்து
எதிர்த்தால்கூட
எதிர்க்கும் வீரமே
அட உயிரைக்கூட தானம் தந்து
சிரிக்கும் வம்சமே

ராஜாளி போல நீ போகும்போது
பார்க்காத கண்ணும் பார்க்குமையா
ராஜாத்தி ராஜன் நீ பேசும் வார்த்தை
ஊருக்கே வேதம் ஆகுமையா

இன்னும் வேற என்ன வேணுமே
அள்ளி தந்து காக்கும் வம்சமே ஓ ஓ
ஐயா மகனும் ஐயா அம்சமே
இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ
வாழும் இந்த வாழ்க்க போதுமே

அள்ளி தந்து காக்கும் வம்சமே ஓ ஓ
ஐயா மகனும் ஐயா அம்சமே
ஹேய்ய் ஏய் ஏய் ஏய்ய்
இன்னும் வேற என்ன வேணுமே ஓ ஓ
வாழும் இந்த வாழ்க்க போதுமே

Leave a Comment