Anbulla kadhali song lyrics


Movie: Aalvar 
Music : Srikanth deva
Vocals :  kunal Ganjavala, kushbu
Lyrics :  Vaali
Year: 2007
Director: Chella ayyavu
 


Tamil Lyrics

அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி
அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா

கண்ணாலே கண்ணாலே கவ்வி கவ்விக்கொள்ளவா
தூக்கத்தில் நான் உன்னை தொட்டு தொட்டு கிள்ளவா

உன் கண்ணும் என் கண்ணும் சிக்கி முக்கி கல்லு தான்
உன் தேகம் என் தேகம் ஒன்னுக்குள்ள ஒண்ணுதான்

அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி

ஐ லவ் யு சொல்கின்ற இருவிழி வானொலி

பொய்வேஷம் போடாத அழகிய காதலி
மின்சார கையாலே நாள்தோறும் நீ தீண்டுடா
உன் காந்த கண்ணாலே உயிரை நீ தூண்டுடா
நான் தேடிடும் தேடிடும் தேவதை நீயடி

உன் ஒவ்வொரு பாகமும் ஓவியம் தானடி
கண்ணாடி பூச்செடி கண்முன்னே நிக்குதே
உன்னை நான் கண்டதும் உள்நாக்கு திக்குதே
புதிர் போட்டதை புதிர் போட்டதை விடை

கண்டுக்கொண்டேனே
அதை உன்னிடம் எதிர்பார்த்து தான் அட நேரில் வந்தேனே

ஆண் பாதி பெண் பாதி சிவ சிவ தாண்டவா

உன் போலே என் காதல் உயர்ந்தது ஆண்டவா
நீ எந்தன் நீ எந்தன் உடல் பொருள் ஆவியே
என் கைகள் உன் மேனி திறந்திடும் சாவியே
நான் சொல்வதை கேட்கிற செல்லமே ஓடிவா

என் வெண்ணிலா மேனியில் வேர்த்ததை மூடவா
பெண் என்ற வார்த்தைக்கு அர்த்தங்கள் ஆயிரம்
ஒவ்வொன்றாய் அறிந்திட ஓர் ஜென்மம் போதுமா

இது காதலின் விளையாட்டு தான் அதை கண்டுக்கொள்ளாதே
உன் வார்த்தைகள் வீண் வார்த்தைகள் வெறும் வாயை மெல்லாதே

அன்புள்ள காதலி அன்றாடம் என்னை காதலி
உன்னைப்போல் என்னைப்போல் உலகத்தில் யாரடி
அன்புள்ள காதலா என் மீது ரொம்ப ஆவலா
என்றென்றும் நீதானே இதயத்தின் காவலா

Leave a Comment