Kaattu Payale Song Lyrics


Movie:  Soorarai Potru
Music : G.V. Prakash Kumar
Vocals :  Dhee
Lyrics :    Snehan
Year:2021
Director: Sudha Kongara Prasad
 

Tamil Lyrics

காட்டு பயலே கொஞ்சி போடா

என்ன ஒருக்கா நீ

முரட்டு முயல தூக்கி போக

வந்த பயட நீ

கரட்டு காடா கெடந்த என்ன

திருட்டு முழி காரா

தொரட்டி போட்டு இழுக்குறடா நீ

திருட்டு பூனை போல என்ன உருட்டி உருட்டி பாத்து

சுருட்ட பாம்பா ஆக்கிபுட்ட நீ

என் முந்தியில சொருகி வெச்ச சில்லறைய போல நீ

இடுப்பு மடிப்பில் என்னென்னமோ செஞ்சுபுட்ட போற நீ

பாறாங்கல்லா இருந்த என்ன பஞ்சு போல ஆக்கிபுட்ட

என்ன வித்த வெச்சிருக்க நீ

யானை பசி நான் உனக்கு யானை பசி

சோழ பொறி நீ எனக்கு சோழ பொறி

பாசத்தால என்ன நீயும் பதற வெக்குற

பத்தி கிட்டு எரியும் என்ன பாத்து நிக்குற

ஜிகருதண்டா பார்வையால குளிர வைக்குற

தூரம் நின்னே என் மனச மேய வெக்குற

நான் வெளஞ்சு நிக்கும் பொம்பள வெக்கம் கெட்டு நிக்குறேன்

உச்சி கொட்ட வெக்குறியே வாடா

நீ எச்சி ஊற வெக்குற என் உடம்ப தெக்குற

எதுக்கு தள்ளி நிக்குற வாடா

நான் சாமத்துல முழிக்கிறேன் சார பாம்பா நெளியுறேன்

என்ன செஞ்ச என்ன நீ கொஞ்சம் சொல்லுடா

உன் முரட்டு ஆசை எனக்குதான் அதுவும் தெரியும் உனக்குத்தான்

என்ன செய்ய உன்ன தின்னு நீக்க போறேன்

கொஞ்சம் கொஞ்சமாக கொஞ்சி கொள்ள போறேன்

வீச்சருவா இல்லாமலே வெட்டி சாய்க்குறேன்

வேலு கம்பு வார்த்தையால குத்தி கிழிக்கிற

சூதானம்மா அங்க இங்க கிள்ளி வைக்குறா

சூசகமா ஆசையெல்லாம் சொல்லி வெக்குற

நீ தொட்டு பேசு சீக்கரம் விட்டு போகும் என் ஜொரம்

வெட்டி கதை பேச வேண்டாம் வாடா

நான் ஓலை பாய விரிக்கிறேன் உனக்கு விருந்து வைக்கிறேன்

முழுசா என்ன தின்னுபுட்டு போடா

நீ எதுக்கு தயங்கி நிக்குற என்ன ஒதுக்கி வைக்குற

சும்மா முரடு புடிக்குற கட்டி அள்ளுடா

உன் முரட்டு திமிரு எனக்குதான் அதுவும் தெரியும் உனக்குத்தான்

பொத்தி வெச்ச ஆசை எல்லாம் பொங்குதடா உலையா

பொத்துக்கிட்டு ஊத்தா பொங்குதடா மழையா

Leave a Comment