Tamil Lyrics
சீயஞ் சிறுக்கிக்கிட்ட
சிவன தொலச்சுட்டேன்
சோட்டு வளவிக்குள்ள
மாட்டிக்க வளஞ்சுட்டேன்
உள்ள பட்டறைய போட்டுட்டு
ஏழரைய கூட்டிட்டு
தப்புச்சு போறாளே அங்குட்டு
இவ வீதியில் வரத
வேடிக்க பாக்கத்தான்
விழுந்த மேகங்கள் எம்புட்டு
இடுக்கியே இடுக்கியே
அடிக்கிறா அடுக்கிய
வெய்யோன் சில்லி
இப்போ நெலத்தில் எறங்கி அனத்துரா
லந்தா பேசி
என்ன ஓரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணால
உட்டாலே தெறிக்கிறேன்
ஒட்டார சிட்டால
மப்பாகி கெடக்குறேன்
என் உசுருல சல்லட சலிச்சு
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடுச்சு
நீ நடக்குற தருக்கியே
மல்லாட்ட ரெண்ட
என்னாட்டம் வந்த
என் உசுருல சல்லட சலிச்சு
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடுச்சு
நீ நடக்குற தருக்கியே
என் காது சவ்வுல
எசையும் ஒவ்வுல
நீ மட்டும் பேசுடி
எலெட்டு நாளட்டும்
எதுவும் உங்கள
இச்சொன்னு வீசுடி
கன்னலு ஒதடு
மின்னலு தகடு
எனக்கு தானடி
சட்டையில் பாக்கெட்ட
தச்சது உன்னைய
பாத்துக்க தானடி
தின்னா
ஆனம் வெச்சு தின்னா
உள்ள கொக்கா மக்கா நின்னா
என் உசுருல சல்லட சலிச்சு
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடுச்சு
நீ நடக்குற தருக்கியே
தொரட்டி கொரல பெறட்டி இவிய
இதயன் பரிச்சியே
கரண்டு கம்பிய சொரண்டி கெடந்த
கதண்ட எரிச்சியே
பதனம் உதற
கவனம் செதர
மனச கலச்சியே
கருக்க பொழுதில்
சிருச்சு தொலச்சு
பகல படச்சியே
தீயா இவ வந்தா
மண்ட வெல்லம் துண்டா
உண்டா இந்த ஜிகிர்தண்டா
என் உசுருல சல்லட சலிச்சு
ஏன் சிரிக்கிற அரக்கியே
உன் குறுக்குல என்னைய முடுச்சு
நீ நடக்குற தருக்கியே
வெய்யோன் சில்லி
இப்போ நெலத்தில் எறங்கி அனத்துரா
லந்தா பேசி
என்ன ஓரண்ட இழுக்குறா
கட்டாரி கண்ணால
உட்டாலே தெறிக்கிறேன்
ஒட்டார சிட்டால
மப்பாகி கெடக்குறேன்
function openCity(cityName) {
var i;
var x = document.getElementsByClassName("city");
for (i = 0; i < x.length; i++) { x[i].style.display = "none"; } document.getElementById(cityName).style.display = "block"; }