Kanne kalaimaane song lyrics


Movie:Kannen kalaimaane 
Music : Yuvan shankar raja
Vocals :  Mathichiyam bala
Lyrics :  vairamuthu
Year: 2019
Director: seenu ramasamy
 


Tamil Lyrics

எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் கண்களை
தொலைத்தேனா..?

எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் இனி நான்
விழிப்பேனா..?

நேரில் வந்தாள்
ஏன் என் நெஞ்சில் வந்தாள்.?

உயிர் கூட்டுக்குள் புகுந்து
பூட்டி கொண்டாள்

எவ்வாறு மறப்பது
உயிர் மரிப்பது நன்று

காதல் என்றால்
கெட்ட வார்த்தை என்றால்

இந்த கலகப்பூச்சிகள்
பிறப்பது ஏன்..?

சாதி கண்டே
காதல் தோன்றும் என்றால்

பட்ஷி விலங்கு ஜாதிக்கு
ஜாதகம் எது..?

கல்யாணம் தானே
காதலின் எதிரி என்றால்
கல்யாணம் தேவையா..?

உன்னையும் என்னையும்
பிரிக்கும் பெரும் பள்ளத்தை
முத்தம் கொண்டே மூடவா..?

எந்தன் கண்களை காணோம்

எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் கண்களை
தொலைத்தேனா..?

எந்தன் கண்களை காணோம்
அவள் கண்களில் இனி நான்
விழிப்பேனா..?

நேரில் வந்தாள்
ஏன் என் நெஞ்சில் வந்தாள்.?

உயிர் கூட்டுக்குள் புகுந்து
பூட்டி கொண்டாள்

எவ்வாறு மறப்பது
உயிர் மரிப்பது நன்று

Leave a Comment