Movie: Maamanithan
Music : Ilaiyaraaja
Vocals : ilaiyaraaja
Lyrics : pa vijay
Year: 2021
Director: seenu ramasamy
Tamil Lyrics
தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர
எதுவோ இருக்குது என்னுள்ள
தவியா தவிக்குது மனசால்
மனசில் ஒளிஞ்சது மெதுவாக
வெளியில் வருகுது அதுவா
சொகமான இதமான காதல்தான் இதுவா
தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர……ஆ….
மேற்கில் சாயும் மேகம் போல்
மனசும் மயங்கி சாயுதே
சாம்பல் குருவி குயில போல்
உன் பேர் சொல்லி கூவுதே
நீ பேசும் காத்து நான்தானே
என்னோட சேர பாரு
ஊர்கோலம் போக என்னோட
நீ கூட வந்தா ஜோரு
நான் பாட நீ கேட்ட பின்னும்
மாறலையா உன் மனசும் இன்னும்
ஏறாத இறங்காத இசையா நீ சொல்லு…..
தட்டிபுட்டா தட்டிபுட்டா இதய கதவ
கட்டிபுட்டா கட்டிபுட்டா இரண்டு உசுர
எதுவோ இருக்குது என்னுள்ள…..
தவியா தவிக்குது மனசால்
மனசில் ஒளிஞ்சது மெதுவாக
வெளியில் வருகுது அதுவா
சொகமான இதமான காதல்தான் இதுவா