Very very bad song lyrics


Movie: Gypsy  
Music : Santhosh narayanan
Vocals :  Pradeep kumar
Lyrics :  Yugabharathi
Year: 2020
Director: Raju murugan
 

Tamil Lyrics

தோழர் ஸ்டெர்லைட்டா
அனுவுலையா
நியூட்ரினோ வா
மணல் கொள்ளையா
எதுல கைதி பண்ணுனாங்க உங்களைய

மக்கள் விரோத திட்டங்கள்
எதிரா
ஹைட்ரோகார்பன் திட்டதிரு எதிரா
ஏதாவது துண்டு அறிக்கை கொடுத்திங்களா

ஹ்ம்ஹும்ம்

எந்த சாமியார் பத்தி பேசிட்டு
வந்திருக்க சாமி

திருநங்கைக்கு ஆதரவா

போராடுனிங்களா
எதுக்காக தோழர்

தீண்டாமை சாதி
கொடுமைகளுக்கு

எதிரா போராடுனிங்களா

சேலம் எட்டு வழி
சாலைகாக
போராடுனிங்களா தம்பி

எதுக்கு தோழர்
ஈழ தமிழர் பிரச்சனைக்கு
ஏழை தமிழன் விடுதலைக்காக
போராடுனிங்களா எதுக்கு
கைது பன்னுனாக உங்கள

ச்ச

தோழர் எதுக்கு கைது
பண்ணுனாங்க உங்கள

ஒரு பாட்டு போட்டேன் சார்

பாட்டு போட்டதுக்கா

அப்படி என்னதாங்க
பாட்டு போட்டைங்க

வெரி வெரி பேடு
பேடு டு தி கோர்
வெரி வெரி பேடு

பேடு டு த கோர்

தோழர் நீங்க எங்க இங்க

உங்களுக்கு முன்னாடியே என்ன
புடிச்சி கூட்டுவத்துடாங்க

ஹஹஹஆஹா

காக்கி கலரு
காக்கி கலரு
எதுக்கு எங்கள அடிக்கிற

ஹே காக்கி கலரு
காக்கி கலரு
கழுத்த புடிச்சு நெறிக்கிற

செத்து போன ஆளுகெல்லாம்

சிலையா நீயும் தொறக்குற
இத்து போன எங்கள ஏன்டா
திரும்ப திரும்ப ஒதைக்கிற

ஸ்டேஷன்ல எதுக்குடா

கட்ட பஞ்சாயத்து நடத்துற
ஏவி விட்ட டாக்கு கெல்லாம்
எலும்பு துண்ட பொருக்குற

பதவி வெறி அக்குயுசிட்க்கெல்லாம்

பண்ணுறியே ஊழியம்
எங்கள போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்

வெரி வெரி பேடு

வெரி வெரி பேடு
பேடு டு த கோர்
பேடு டு த கோர்

வெரி வெரி பேடு

ஓ நோ
பேடு டு த கோர்

………………………..

கேங் ரேப்பு செஞ்சவனும்
போறான் போறான் காருல
நாலு மர்டர் செஞ்சவன

பார்த்தேன் ஷாப்பிங் மாலுல

கொள்ளை அடிச்சா மந்திரிமாறு
வாறன் ஹெலிபடுல
பொரிக்கிகெல்லாம் படா சைஸ்சு

பேனர் இந்த ஊருல

அவனே எல்லாம் கூண்டுல ஏத்த
உனக்கு இருக்கா தைரியம்
எங்கள போட்டு மிதிக்கிறியே

இதா ஜனநாயகம்

வெரி வெரி பேடு
வெரி வெரி பேடு
பேடு டு த கோர்

ஓ யஹ் யஹ் யஹ் யஹ்

வெரி வெரி பேடு
இட்ஸ் டூ பேடு யா
பேடு டு த கோர்….ர்ர்….

வெரி…
சார்ஜ்….
வெரி வெரி…
ஹேண்ட்ஸ் அப்….

வெரி…
வெரி வெரி….
யுவர் அன்டர் அரஸ்ட்….

செயின் அறுத்த பேர்வழிதான்

செல்பி எடுத்து அனுப்புறேன்
கூலி படை தைவனும்தான்
உனக்கு கேக்கு ஊட்டுறேன்
சாதி கொலைகாரன் எல்லாம்
டிவி பெட்டி கொடுக்குறேன்

நீதிய விக்கும் திருடன் எல்லாம்
ஈபிகோ வ கிழிக்குறான்
அவன எல்லாம் கூண்டுல ஏத்த
உனக்கு இருக்கா தைரியம்

எங்கள போட்டு மிதிக்கிறியே
இதா ஜனநாயகம்

வெரி வெரி பேடு
வெரி வெரி….வெரி வெரி

பேடு டு த கோர்
ஹே….

நாங்க வெதச்ச நெலத்துல
எத்தனை எத்தனை பில்டிங்கு
ஊர விட்டு தொரத்துறியே
எங்க போச்சி என் பங்கு

எங்க மண்ணை புடுங்குனவன்
ஏரோப்பிளேன்னில் பறக்குறான்
சொந்த ஜனங்க சுருண்டு படுக்க
ஜெயிலு கதவ தொறக்குறேன்

என்னான்னு கேட்டாக்கா
குண்டாசுல போடுங்குறான்

வெரி வெரி பேடு
பேடு டு த கோர்

வெரி வெரி பேடு
பேடு டு த கோர்

வெரி வெரி பேடு

காக்கி….

காக்கி….
காக்கி கலரு

ஹேய்

காக்கி….
காக்கி….

காக்கி கலரு

வெரி வெரி பேடு….
ஆஆஆ…..ஆஆஆ….ஆஆஆ…..

காக்கி….

காக்கி….
காக்கி கலரு

காக்கி….
காக்கி….

காக்கி கலரு

வெரி வெரி பேடு….

குரலை உயர்த்து
உண்மையை பேசு

உரக்க பேசு

குரலை உயர்த்து
உண்மையை பேசு
உரக்க பேசு

Leave a Comment